சமுதாய தலைவர்கள் - திரு.பெருமாள் நாயக்கர்
திரு.பெருமாள் நாயக்கர் அவர்கள் 1932 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், சேர்வைகாரன்பட்டி கிராமத்தில் விவசாய குடும்பத்தில், உயர்திரு, கஞ்சையை நாயக்கர், திருமதி ராமக்கம்மாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவர் கந்தசாமிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும், பூதலபுரம் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்து அப்பகுதி மக்களுக்கு சிறப்பான ஒரு பணியை ஆற்றி வந்தார். பின்னர் தன் மூத்த சகோதரரான உயர்திரு. மூக்காண்டி நாயக்கர் அவர்கள் மறைவுக்குப் பிறகு அவர் வகித்து வந்த புதூர் வட்டார ராஜகம்பள மகாசன சங்கம் தலைவர் பதவியை 1999 ஆம் ஆண்டு முதல் இன்று வரை வகித்து வருவதுடன் புதூர் வட்டார ராஜகம்பளம் மக்களுக்கு ஒர் அரணாகவும் பாதுக்காவலராகவும் அன்று முதல் இருந்து வருகிறார்.