🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமுதாய தியாகிகள் - துறையூர்- திருமதி.ராஜாமணி முத்துசாமி

அமரர்.திருமதி.ராஜாமணி அம்மாள் அவர்களின் வாழ்க்கை குறிப்பு

பெயர் திருமதி.ராஜாமணி முத்துசாமி

பிறந்த இடம் சித்திரைப்பட்டி, துறையூர் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்

தோற்றம் 03.08.1952

மறைவு 13.04.2015

பெற்றோர் ரங்கசாமி நாயக்கர், முத்தம்மாள்

கணவர் Dr. ஐ.முத்துசாமி RHMP

உடன் பிறந்தவர்கள் மூன்று இளைய சகோதரிகள் – இல்லதரசிகள்

இரண்டு இளைய சகோதர்கள் – 1.Commandar in Indian Navy (Ret.)

2.Lt.Colonel in Indian Army (Ret.)

பிள்ளைகள் ஒரு மகன், ஒரு மகள்

பள்ளி பருவத்திலயே மேடை ஏறி பல சொற்பொழிவுகள் ஆற்றியவர். அதனை அந்த கிராம மக்கள் பெருமையுடன் இன்றும் நினைவு கூறுகின்றனர்.

துணிச்சல் மிக்கவர். பல்வேறு தருணங்களில் கிணற்று நீரில் முழ்கி கொண்டிருந்த இரண்டு பெண்களையும், ஒரு சிறுவனையும் , தன் உயிரையும், குடும்பத்தையும் பொருப்படுத்தாது காப்பாற்றி உள்ளார்.

திருச்சி மாவட்ட இளையோர் பேரவை தலைவியாக(நேருயுகேந்திரா), 586 மன்றங்களின் தலைவராகவும், துறையூர் தாலுக்கா நுகர்வோர் கவுன்சில் தலைவராகவும், தமது இறுதி நாள் வரை சேவையாற்றியுள்ளார். திருச்சி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று பல இளையோர் விழிப்புணர்வு முகாம்கள்,சுற்றுச்சுழல் விழிப்புணர்வு முகாம்கள், நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்கள், இளைஞர் மற்றும் மகளிருக்கான பல தொழில் பயிற்சி பட்டறைகள் நடத்தி ஏராளமானோர் பயன்பெற உதவி செய்துள்ளார்.

10 வருடங்களுக்கு மேலாக, திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையிலான இளைஞர் மற்றும் விளையாட்டு நலன் குழுவில் (Sports and Youth Affairs) ஆலோசனை குழு உறுப்பினராக (District Advisory Committee) தனது இறுதி நாள் வரை சேவையாற்றியுள்ளார்.

இவரது மகன் திரு.மு.ரமணிகாந்தன் வழக்கறிஞராக பணிபுரிந்த காலத்தில் (தற்போது தமிழ்நாடு அரசு, இந்துசமய அறநிலையத்துறையில் நிலை-1 திருக்கோயில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார்) அவரிடம் வந்த அனைத்து விவகாரத்து தொடர்பான பிரச்சினைகளையும், தாமே முன்னின்று சமரசம் செய்து, சம்பந்தப்பட்ட தம்பத்தியரை தனித் தனியாக, அழைத்துப் பேசி தம் பொறுப்பை உணரச் செய்து, ஒன்று கூடி வாழச் செய்துள்ளார்.

 இவரது சமூக சேவைகளை கருத்தில் கொண்டு துறையூர் உரிமையியல் நடுவர் அவர்களால் லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) உறுப்பினர் பதவிக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

துறையூர் நகரில் பலமுறை மாவட்ட ஆட்சி தலைவர்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை கொண்டு “நேருக்கு நேர்” (Face to Face Programme) நிகழ்ச்சிகள் நடந்தி, அந்த இடத்திலேயே (Spot Decisions) பல தீர்வுகளை பொதுமக்களுக்குப் பெற்று தந்துள்ளார்.

எந்தவொரு அதிகார பதவியும் இல்லாத நிலையில் குடிநீர் வசதி, சாலை வசதி, பேருந்து வசதி, தெருவிளக்கு வசதி, சிறுபாலங்கள் (Culverts) அமைத்து கொடுக்க உதவுதல் போன்ற பல சமூக சேவைகளை திறம்பட ஆற்றியுள்ளார்.

  இவரை பின்பற்றிய பல இளைஞர் மன்ற பொறுப்பாளர்கள் ஊராட்சி தலைவர்களாகவும், ஒன்றிய, மாவட்ட ஊராட்சி குழு பதவிகள் பெற்று அந்த பகுதி மக்களுக்கு நல்ல சேவையாற்றி வருகின்றனர்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய நிலையிலும், மருத்துவர்கள் அறிவுறுத்திருந்தும் 6-மாதங்கள் மட்டுமே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலிருந்து தவிர்த்தவர.,அதன்பிறகு அனைத்து பொது நிகழ்ச்சிகள், சமூக சேவைகளில் தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்தி கொண்டார். மேற்படி அறுவை சிகிச்சை செய்து 61/2 வருடங்களே உயிர் வாழ்ந்தார்.

இறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு துறையூர்  நகரில் இவரது தலைமையிலான Mock Parliament (மாதிரி பாராளுமன்றம்) எனும் பொதுநிகழ்ச்சியில், திருச்சி மாவட்டத்திலிருந்து ஏரளாமான இளைஞர் மன்ற தலைவர்களும்,மகளிர் மன்ற தலைவியரும், உறுப்பினரும் கலந்து கொண்டனர்.

துறையூர் தாலுக்காவை சுற்றியுள்ள பெருபான்மையான கிராமைங்களில் இவரது மறைவிற்கு பிறகும்,இவர் ஆற்றிய சமூகநல தொண்டுகளை நன்றியுடன் பெருமையாக நினைவு கூறுகின்றனர்.

இவரது மறைவிற்கு பிறகு துறையூர் தாலுக்கா இளையோர் பேரவை அமைப்பானது, மறைந்த இந்திய குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம். மது ஒழிப்பிற்காக உயிர் நீத்த காந்தியவாதி சசிபெருமாள் ஆகியோரின் புகைப்படைங்களுடன் இவரது புகைப்படத்தையும் வைத்து அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சில் திருச்சி மாவட்ட அளவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  இவர் அடிக்கடி குறிப்பிடும் சில வாக்கியங்கள்:-

“நான் எத்தனை நாட்கள் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல. நாம் இறந்த பிறக்கும் மக்கள் மனதில் வாழ்கிறோமா என்பது முக்கியம்”!

“ தேளுடைய குணம் கொட்டறது தான் என்றால் நம்குணம் மன்னிப்பது”

“நம்முடன் எதிரிகள் இருப்பார்கள், துரோகிகள் இருப்பார்கள், முட்டாள்கள் இருப்பார்கள், நல்லவர்களும் இருப்பார்கள், நண்பர்களும் இருப்பார்கள். அத்துனைபேரையும் ஒருங்கிணைத்து நடத்தால்தான் அவன் தலைவனாக இருக்க முடியும். இவர்களில் யாராவது ஒருத்தருடன் கூட நம்மால் இருக்க முடியவில்லை என்றால் நாம் தலைமை பொறுப்பில் இருக்க அருகதை இல்லை என்று அர்த்தம்”

“எந்தவெரு மனிதன் பொறுமையுடனும், சசிப்புத்தன்மையுடனும் இருக்கிறானோ அவன் அகிலத்தையும் ஜெயித்து விடுவான்.”

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved