சமுதாய தியாகிகள் - விளாத்திக்குளம் - திரு.பொன்னுசாமி நாயக்கர்
விளாத்திகுளம் மாப்பிள்ளைசாமி என்றழைக்கப்பட்ட பொன்னுசாமி நாயக்கர், விளாத்திகுளம் நல்லப்பசாமியின் உடன்பிறந்த தங்கதுரைச்சி அம்மாளின் மகன் ஆவார். இவர் ஆற்றிய சமுதாயப் பணிகள் கணக்கிலடங்காதவை. தேசகாவல் பணியை திறம்பட செய்ததற்காக கிடைத்த நிலங்களை விற்று நம்மின மக்களின் வழக்குகளை நடத்தியவர். காடல்குடி பாளையக்காரா் குசலவீர கஞ்ஜெய நாயக்கரின் பேரனான இவர் பழுத்த காங்கிரஸ்காரா். விளாத்திகுளம் ஆற்றில் வெள்ளம் வந்தபோது இவர் ஆற்றிய மக்கள்பணிகளுக்காகவும், பஞ்சம் வந்த காலத்தில் கஞ்சித்தொட்டி அமைத்து மக்களின் பாராட்டை பெற்றவர். பாஞ்சாலங்குறிச்சி, காடல்குடி பாளையக்காரா்கள் பயன்படுத்திய வாளை, சிவகாசி நாயக்கர் தெப்பம் அருகே உள்ள தனியார் அருங்காட்சியத்தில் வைத்து பாதுகாத்தவர். அந்த வாள் இன்றும் அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.