சமுதாய தியாகிகள் - குண்டுகுளம் - திரு.R.பாலுசாமி நாயக்கர்
அமரர்.திரு.R.பாலுசாமி நாயக்கர் : இராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவில் உள்ள குண்டுகுளம் கிராமத்தில் பிறந்தவர். அங்கிருந்து இருந்து பிழைப்புதேடி, தனிஒருவனாக ஆந்திரா மாநிலம் நெல்லூர் நகருக்கு சென்றவர், பின்நாட்களில் இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி சுற்றுவட்டாரப்பகுதியை சேர்ந்த இளைஞர்களையெல்லாம் அழைத்துச்சென்று வேலையில் அமர்த்தி, பின்னர் அவர்களே சொந்தமாக தொழில் தொடங்கிட ஆதரவு நல்கியவர். இன்று கம்பளத்து சமுதாயத்தை சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நெல்லூரில் குடியிருப்பதற்கும், அவர்கள் நூற்றுக்கும் அதிகமான நிறுவனங்களை நிறுவி, ஆழமர வேர் போல் காலூன்ற வழிதடம் அமைத்திட்ட மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரர். நமது சமுதாயத்தின் சமகால வரலாற்றில், சாதாரண குடும்பத்தில் பிறந்து இவ்வளவு குடும்பங்களுக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுத்தவர் இவரைத்தவிர எவர் இருக்கமுடியும்?