சமுதாய தியாகிகள் - கல்லூரணி - திரு. ஶ்ரீ. இராஜகோபால்சாமி
அமரர்.திரு.ஶ்ரீ. இராஜகோபால்சாமி
கல்லூரணி சாமி என்றழைக்கப்பட்ட திரு.ஶ்ரீ. இராஜகோபால்சாமி அவர்கள், பாஞ்சாலங்குறிச்சி சக்கதேவி ஆலயக் கமிட்டியின் ஸ்தாபனர் ஆவார். பல்வேறு பிரச்னைகள் பாஞ்சையில் வந்தபோது, அவற்றை முன்னின்று ஒழுங்கு படுத்தியர். இன்று பாஞ்சையில் நமக்கு “சந்ததியினர் குடியிருப்பு” கிடைக்க காரணமாக இருந்தவர். இவரது முயற்சியால்தான் தொல்பொருள் ஆய்வுத்துறை நாகசாமி அவர்கள் தலைமையில் அகழ்வாராய்ச்சி செய்தது. கட்டபொம்மனாரின் புகழ் பரப்பியவர்களில் இவரும் ஒருவர்.