சமுதாய தியாகிகள் - கொண்டமுத்தனூர் - திரு.கே.என்.ரெங்கநாயகம்
அமரர்.திரு.கே.என்.ஆர். (எ) கே.என்.ரெங்கநாயகம் : ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள கொண்டமுத்தனூரை சேர்ந்தவர். கோவையில் புகழ்பெற்ற பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர், தென்னக இரயில்வேயில் TTE ஆக பணியாற்றி ஓய்வுபெற்றார். அன்றைய காலகட்டத்தில் மத்திய அரசுத்துறையில் பணியாற்றிய கம்பளத்தார்கள் ஒருசிலரில் குறிப்பிடத்தக்க முதன்மையானவர். சத்தியமங்கலம் தாலூகா காங்கிரஸ் கமிட்டி தலைவாராக பதவிவகித்து, அரசியலிலும் தன் முத்திரையை பதித்தவர். ஈரோடு மாவட்டத்தில் அனைவராலும் கே.என்.ஆர் என்று அறியப்படுபவர். அரசியல், சமுதாய கூட்டங்கள், மாநாடுகள் என எதுவாகினும் திறமையாக ஓருங்கிணைத்து, வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் வல்லமையுடையவர். தமிழகம் முழுவதிலிமிருந்து ஜமீன்தார்கள், அரசியல், சமுதாய தலைவர்கள், பெரியோர்களை ஒருங்கிணைத்து, சத்தியமங்கலம் அருகேயுள்ள பெரியூரில் திரு.க.சுப்பு அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்து தலைமை தாங்க, மிகப்பெரிய அளவில் சமுதாயக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர். சமுதாய பணியாற்றுபவர்களை ஊக்குவிப்பதுடன், வெளிமாவட்டங்களை சேர்ந்த சமுதாய சேவகர்களை அன்புடன் வரவேற்று, உபசரித்து சுற்றுப்பகுதியிலுள்ள கிராமங்களுக்கு சென்று சமுதாயபணியினை செய்திட பேருதவி செய்தவர். சமுதாய மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் எதுவாகிலும் சம்மந்தப்பட்ட அரசுதுறையை அணுகி தீர்வுகாண உறுதுணையாக இருந்தவர் திரு.கே.என்.ஆர். அவர்கள். அன்னாரின் சேவை, இன்றைய இளைஞர்களுக்கும் சமுதாய தலைவர்களுக்கும் வழிகாட்டியாக விளங்குகிறது என்றால் மிகையல்ல. திரு.கே.என்.ஆர். அவர்கள் சமுதாயத்திற்காற்றிய சேவையை என்றென்றும் நினைவில் கொள்வது நமது கடமை.