சமுதாய தியாகிகள் - ஊத்துக்குழி . திரு. சுப்பா நாயக்கர்
அமரர்.திரு. சுப்பா நாயக்கர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குழியை சேர்ந்தவர் அமரர் திரு.சுப்பா நாயக்கர். இராஜகம்பள சமுதாயத்தினர் விவசாயக்குடியில் பிறந்து, விவசாயம் நசிவுற்று, நாளுக்கு நாள் பின்னோக்கி சென்றுகொண்டிருந்த சமயத்தில், தொழில் துறையில் கால்பதித்து, முத்திரை பொறித்த சமுதாயத்தின் மூத்த முன்னோடி திரு.சுப்பா நாயக்கர் அவர்கள். பி.எஸ்.ஆயில் மில்ஸ் என்ற தேங்காய் எண்ணெய் ஆலையை நிறுவி சமரசமற்ற தரத்தால் வட இந்தியா வரை தன் தொழில் சாம்ராஜ்யத்தை கட்டமைத்தவர். அவர் மறைந்தாலும் இன்றளவில் பி.எஸ். பிராண்டு எண்ணெய்க்கென்றே வாடிக்கையாளர் வட்டம் மும்பை, சென்னை, அகமதாபாத் போன்ற பல்வேறு நகரங்களில் இருப்பது தொழிலிலும், தரத்திலும்அவர் கடைபிடித்த நேர்மை விளங்கும்.