சமுதாய தியாகிகள் - குடிப்பட்டி - திரு.S.K முத்தையா B.A.,
அமரர்.திரு.S.K முத்தையா B.A., மதுரை மாவட்டம் குடிப்பட்டியை சேர்ந்தவர். சமுதாய சேவைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். நமது சமுதாயத்தில் அரசு பதிவுத்துறையில் முதல் சார்பதிவாளராக பணியாற்றியவர். அரசுத்துறையில் இருப்பவர்கள் சாதிய அமைப்புகளில் இருக்கக்கூடாது என்கிற கட்டுப்பாட்டால், அரசுத்துறையில் பணியாற்றுபவர்கள் சமுதாயப்பணியிலும் தங்களை ஈடுபடுத்தி கொண்டு சமுதாய பணியினையும் தொடரவேண்டும் என்ற வேட்கையில், இளைஞர்களின் பெருமுயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் முதல் தலைவராகி சமுதாயப் பணியாற்றியவர்.