சமுதாய தியாகிகள் - வலுக்கலொட்டி. மைனர் - திரு.P.S.M. பெருமாள் நாயக்கர்
அமரர்.மைனர்.திரு.P.S.M. பெருமாள் நாயக்கர்: விருதுநகர் மாவட்டம், வலுக்கலொட்டி கிராமத்தில் பிறந்த மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர். தான, தர்மங்களில் பெரும் ஈடுபாடு கொண்ட மைனர்.திரு.பெருமாள் நாயக்கர் அவர்கள், தன் சமுதாய மக்களை ஒருங்கிணைக்க முதன்முதலாக ”எர்ர கொல்ல இராஜகம்பள மஹாஜன சங்கம்” என்ற அமைப்பை நிறுவி, அதன் நிறுவனத் தலைவராக இருந்து சமுதாயப் பணியைத் தொடங்கி வைத்த முன்னோடி. பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு இவரின் இல்லம் வேடந்தாங்கலாக இருந்துள்ளது என்றால் மிகையல்ல.