சமுதாய தியாகிகள் - இராமநாயக்கன்பட்டி - திரு. கே. ரங்கசாமி.B.Sc.,
அமரர்.திரு.கே.ரங்கசாமி.Bsc., நாமக்கல் மாவட்டம் , இராசிபுரம் அருகேயுள்ள இராமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். காவல்துறையில் தனது பணியைத்துவங்கிய இவர் டிஎஸ்பி ஆக பணிஓய்வு பெற்றார்.
நாமக்கல் தொட்டிய நாயக்கர் கல்வி அறக்கட்டளை தொடங்கிட பின்புலமாக இருந்தவர், பணியிலிருந்து ஓய்வு பெற்ற அடுத்தநாளிலிருந்து தன்னை சமுதாயப்பணியில் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக்கொண்டு, அறக்கட்டளையின் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டு, நாமக்கல் மாவட்டதில் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் 155க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் சமுதாய மக்களை ஒருங்கிணைத்து “தொட்டிய நாயக்கர் கல்வி அறக்கட்டளைக்காக” குறுகிய கால இடைவெளியில் ரூபாய் 35 லட்சத்திற்கும் அதிகமாக நிதி திரட்டியவர். இன்றைய காலகட்டம் வரையில் கம்பளத்தார் சமுதாய அமைப்புகளில் பெருமளவில் நிதியைக்கொண்டிருக்கும் அமைப்பு என்றால் அது “தொட்டிய நாயக்கர் கல்வி அறக்கட்டளை” மட்டுமே என்பது நிதர்சனம். இந்த மொத்த நிதியும் நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே திரட்டியது என்றால் நாமக்கல் மாவட்ட சமுதாய மக்கள் டிஎஸ்பி.ரங்கசாமி அவர்களின் மீது வைத்துள்ள நம்பிக்கையும் அவரின் சமுதாயப் பணியும் எளிதில் விளங்கும். நாமக்கல் மாவட்டத்தில் சமுதாயத்திற்காக மிகப்பெரிய கல்வி மையம் அமைக்கவேண்டும் என்பது அவரின் லட்சியமாக இருந்தது. அவரின் லட்சியம் நிறைவேறிட அனைவரும் உழைத்திடுவோம்.