ஊராட்சி மன்றத் தலைவர் - அரவக்குறிச்சி. திருமதி.தமிழரசி தனக்கோடி
திருமதி.தமிழரசி தனக்கோடி அவர்கள் 1974-ல் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள தடாகோவிலில் திரு.கோபால் – திருமதி.பழனியம்மாள் தம்பதியினருக்கு விவசாய குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். இவர் நடுநிலப்பள்ளி வரை பயின்றுள்ளார். அதேவூரைச் சேர்ந்த திரு.தனக்கோடி (இவரைப்பற்றி மேலும் விபரங்களுக்கு நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) அவர்களை மணமுடித்த திருமதி.தமிழரசி அவர்களுக்கு D.ரேணுகா என்ற ஒரே மகள் உள்ளார்.
விவசாயம் மற்றும் நிதிநிறுவனம் நடத்திவரும் கணவர் திரு.தனக்கோடி அவர்கள் அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட விரும்பி, 1989-ல் அஇஅதிமுகவில் இணைந்தபொழுதிலிருந்து, விவசாயம் மற்றும் குடும்ப நிர்வாகத்தை சிறப்பாக நிர்வாகித்த திருமதி. தமிழரசி தனக்கோடி அவர்கள், கணவரின் அரசியல் பணிக்கும் ஊக்கமாகவும், உதவிகரமாகவும் இருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிவாகை சூடினார் திருமதி.தமிழரசி தனக்கோடி அவர்கள். இப்புதிய பொறுப்பின் மூலம் திருமதி.தமிழரசி தனக்கோடி தம்பதியினர் சாதி,மதம்,இனம்,மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றி, சார்ந்துள்ள கட்சிக்கும்,சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.