ஒன்றியக்குழு உறுப்பினர் - அந்தியூர் - திருமதி.சுகாமணி சந்திரன்
திருமதி.சுகாமணி சந்திரன் அவர்கள் 1985-இல் ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள மயிலம்பாடி கிராமத்தில் திரு.பொம்ம நாயக்கர் – திருமதி. எர்ரம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். திரு.சந்திரன் அவர்களை மணமுடித்துள்ளார்.
திரு.R.சந்திரன் அவர்கள் 1974-இல் ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள மூங்கில்பட்டி கிராமத்தில் திரு.ரங்க நாயக்கர் – திருமதி. பழனியம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். தொடக்கக் கல்வி வரை பயின்றவர், விவசாயப்பணியில் ஈடுபட்டு வருகிறார். திரு.சந்திரன்-திருமதி.சுகாமணி தம்பதியினருக்கு C.கௌரி என்ற மகளும், C. தினேஷ் என்ற மகனும் உள்ளனர்.
தனது 20-ஆவது வயதில் அ இஅதிமுக-வில் இணைந்து அரசியல் பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்த திரு.சந்திரன் அவர்கள், தனது 25-ஆவது வயதில் கிளைக்கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் ஊராட்சிக்கழக செயலாளராக நியமிக்கப்பட்டு, தற்பொழுது வரை அப்பதவியில் நீடித்து வந்தார். கட்சிப்பணிகளில் தீவிர ஈடுபாடு கொண்ட திரு.சந்திரன் அவர்கள், கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுது வழங்கும் மக்கள் நலத் திட்டங்களை முழுமையாக மக்களுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார். தவிர கட்சி நடத்தும் அனைத்து நிகழ்விலும் கலந்து கொள்ளும் திரு.சந்திரன் அவர்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் போன்றவற்றிற்கு பெருமளவு மக்களுடனும், உள்ளூர் கழக நிர்வாகிகளுடனும் கலந்து கொண்டு வருகிறார். தவிர உள்ளூர் மக்களின் சுக-துக்கங்களில் முதல்நபராக கலந்துகொண்டு, மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றி வருகிறார் திரு.சந்திரன் அவர்கள்.
அரசியல் பொதுவாழ்வில் ஏறக்குறைய முப்பத்தைந்தாண்டு காலம் தொடர்ந்து பயணித்திருந்தாலும், இதுவரை தேர்தல் அரசியலை தவிர்த்து வந்த திரு. சந்திரன் அவர்கள், 2013-ஆம் ஆண்டிலிருந்து கீழவாணி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், 2018-இல் மீண்டும் அச்சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பு வகித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அந்தியூர் ஒன்றியம் 15-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு, அஇஅதிமுக சார்பில் தனது துணைவியார் திருமதி.சுகாமணி அவர்களை வேட்பாளராகக் களமிறக்கி, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே மகத்தான வெற்றியை பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், இந்த வார்டில் முதல்முறையாக அதிமுக கைப்பற்றி வரலாற்றுச் சாதனைக்கு காரணகர்த்தாவாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிக நீண்ட அரசியல் அனுபவமுள்ள திரு.சந்திரன் - திருமதி. சுகாமணி தம்பதியினர், இப்புதிய பொறுப்பின் மூலம் சாதி,மத,இன, மொழி பாகுபாடின்றி அனைவருக்கும் சிறப்பாக பணியாற்றி, வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்கவேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.