ஊராட்சி மன்றத் தலைவர் - விருதுநகர் - திரு.P.வெங்கட்டராஜுலு
திரு.P.வெங்கட்டராஜுலு அவர்கள் 14.12.1970-இல் விருதுநகர் மாவட்டம், விருதுநகர் அருகே வி.சுந்தரலிங்கபுரம் (கருப்பம்பட்டி) கிராமத்தில் திரு.எம்.பெருமாள் – திருமதி.தங்கமுத்து தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். எஸ்.எஸ்.எல்.சி வரை பயின்றுள்ள திரு.வெங்கட்டராஜுலு அவர்களுக்கு திருமணமாகி,திருமதி.V.விஜயராணி என்ற மனைவியும் V.கோதையாழினி என்ற மகளும் உள்ளனர்.
இளம்வயது முதலே திமுக அனுதாபியாக வளர்ந்தவர், கடந்த 20வருடங்களுக்கும் மேலாக வி.சுந்தரலிங்கபுரம் கிளைக்கழக செயலாளராக பணியாற்றி வருகிறார். தீவிர இயக்கப்பணியாளரான திரு.வெங்கட்டராஜுலு அவர்கள் திமுக நடத்தும் பல்வேறு போராடங்களிலும், மறியல், ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார். இதற்காக திமுக தலைவராக இருந்த டாக்டர்.கலைஞர் அவர்களிடம் பாராட்டு பத்திரம் பெற்றுள்ளார். கழகம் ஆட்சிக்கட்டிலில் இருந்த காலத்தில், அரசின் அனைத்து மக்கள் நலத் திட்டங்களின் சலுகைகளையும், பலன்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளார் திரு.வெங்கட்டராஜுலு அவர்கள். உதவி,கோரிக்கை என்று தன்னை நாடிவரும் மக்களுக்கு தன்னாலான உதவிகளை செய்து கொடுத்துள்ளார். தவிர உள்ளூரில் அனைத்து முக்கிய நிகழ்விலும் மக்களின் சுக, துக்கங்களிலும் கலந்து கொண்டு மக்களோடு மக்களாக, மக்கள் எளிதில் அணுகும் அரசியல் தலைவராக இருந்து வருகிறார் திரு.வெங்கட்டராஜுலு அவர்கள்.
2011-ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தல்களில் பங்கெடுத்து வரும் திரு.வெங்கட்டராஜுலு அவர்கள், 2011-ஆம் ஆண்டு வள்ளியூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார். தோல்விக்குப் பின்னரும், தொடர் அரசியலிலும், பொதுமக்கள் சேவையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்த திரு.வெங்கட்டராஜுலு அவர்கள் கடந்த 2016-இல் நடைபெற இருந்த தேர்தலில் மீண்டும் களமிறங்கிய நிலையில், தேர்தல் இரத்து செய்யப்பட்டதால் திரு.வெங்கட்டராஜுலு அவர்களின் வெற்றி தள்ளிப்போனது. இந்நிலையில் 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் வள்ளியூர் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக களமிறங்கி மகத்தான வெற்றி பெற்றார். கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாக அரசியலில் பயணித்து வரும் திரு.வெங்கட்டராஜுலு அவர்கள் இப்புதிய பொறுப்பின் மூலம் சாதி,மத,இன, மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவையாற்றி, சார்ந்திருக்கும் கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.