ஊராட்சி மன்றத் தலைவர் - மதுரை-திரு.K.அழகர்சாமி.
திரு.அழகர்சாமி அவர்கள் 12.06.1961-ல் மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், செங்குளம் கிராமத்தில் திரு.காளியப்ப நாயக்கர் - திருமதி.சுந்தரம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். நடுநிலைப்பள்ளி வரை கல்வி பயின்றவர், தனது பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப்பணிக்கு திரும்பினார். இவருக்கு திருமணமாகி திருமதி. A.சுப்புலட்சுமி என்ற மனைவியும், A.ராதா என்ற மகளும், A.சுகாசேஷன் என்ற மகனும் உள்ளனர்.
சிறுவயதிலிருந்தே சமுதாய பணிகளில் அதிக ஈடுபாடுகொண்ட திரு.அழகர்சாமி அவர்கள், செங்குளம் கிராமத்தில் 1985-இல் இராஜகம்பள மகாஜன வாலிபர் சங்கத்தை ஆரம்பித்து, அச்சங்கத்தின் தலைவராக கடந்த 35 ஆண்டுகளாக திறம்பட செயல்பட்டு வருகிறார். ஆரம்பகட்ட உறுப்பினர் சந்தாவாக ஒரே ஒரு ரூபாவைப்பெற்று இயங்கத்தொடங்கிய இச்சங்கம், 1999-முதல் சொந்தக் கட்டிடத்தில் இயங்கிடும் வகையில் சிறப்பான முறையில் நிர்வாகத்தை நடத்திய வருகிறார் திரு.அழகர்சாமி. இச்சங்கத்தின் சார்பில் வருடந்தோறும் மாவீரன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருவதுடன், பாஞ்சை வீரசக்கதேவி கோவில் சித்திரைத் திருவிழாவில் ஜோதி ஊர்வலத்துடன் பெருமளவு மக்களைத்திரட்டி கலந்து கொண்டு வருகிறார்.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் இரசிகராக இருந்து, 1977-இல் எம்ஜிஆர் அவர்கள் அதிமுக-வைத் துவங்கியபொழுது அதில் இணைந்து வாக்களிக்கும் உரிமைபெறும் முன்னரே அரசியல் களம் கண்டவர் திரு.அழகர்சாமி அவர்கள். 1982-இல் வாக்குரிமை பெற்றதிலிருந்து தீவிரமாக கட்சிப்பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டவர், செங்குளம் கிளைக்கழக செயலாளராக பதவி வகித்து வருகிறார். அரசின் நலத்திட்ட உதவிகளை அடித்தட்டு மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றி வரும் திரு.அழகர்சாமி அவர்கள், மக்களின் தேவைகள், கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் அக்கரை எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருபவர்.
அரசியல்கட்சி, சமுதாய அமைப்புகள் தாண்டி உள்ளூர் பொதுக்காரியங்களில் முன்னின்று பணியாற்றி வரும் திரு. அழகர்சாமி அவர்கள், கிராமத்திலுள்ள பழைமையான காளியம்மன் கோவிலை புதுப்பிக்கும் பணியில் முக்கியப் பங்காற்றி வரும் திரு.அழகர்சாமி அவர்கள், நிதிவசூல் செய்தல், கட்டுமானப் பணிகளில் பங்கெடுத்துக்கொள்தல் என ஒவ்வொரு காரியத்திலும் முன்னின்று பணியாற்றி வருகிறார். மேலும் உள்ளூர் நூலகத்தில் பகுதிநேர நூலகராக 1991 முதல் 2004 வரை பணியாற்றியுள்ளார்.
அரசியலில் நாற்பதாண்டுகாலம் அனுபவமுள்ள திரு.அழகர்சாமி அவர்கள், தேர்தல் அரசியலில் ஆர்வம் காட்டாதிருந்த நிலையில், கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், முதன்முறையாக செங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக களமிறங்கி மகத்தான வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து தரப்பு மக்களின் அன்பைப் பெற்றவரான திரு.அழகர்சாமி அவர்கள், வெற்றியைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் வகையில் சாதி, மதம், மொழி, இனம் கடந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் பாடுபட்டு, சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.