ஊராட்சி மன்றத் தலைவர் - விளாத்திக்குளம் - திரு.S.சந்திரசேகர்
திரு.S.சந்திரசேகர் அவர்கள் 1964-இல் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள சித்தவநாயக்கன்பட்டி கிராமத்தில் திரு.செல்வராஜ் – திருமதி. தங்கவேல்தாய் அம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். தொடக்கக்கல்வி வரை பயின்றுள்ளவருக்கு திருமணமாகி திருமதி.கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும் அஜித்குமார் என்ற மகனும் உள்ளார்.
அதிமுக ஆதரவளராக வளர்ந்த திரு.சந்திரசேகர் அவர்கள் கட்சியின் சாதாரணத் தொண்டராகவே இருந்து வருகிறார். எளிய குடும்பத்தைச்சேர்ந்த, பெரிய பின்புலமற்றவரான திரு.சந்திரசேகர் அவர்கள் அடித்தட்டு மக்களோடு மக்களாக வாழ்பவர். அக்கிராம மக்களின் நம்பிக்கையைப் பெற்றவரான திரு.சந்திரசேகர், உள்ளூர் மக்களின் தேவையான உதவிகளை மனமுவந்து செய்துகொடுப்பவர். அம்மக்களின் சுக-துக்கங்களில் முன்னின்று பங்கெடுத்துக்கொள்பவர், உள்ளூர் நிகழ்வுகள், விஷேசங்கள் அனைத்திலும் முக்கியப்பொறுப்பேற்று நடத்துபவர் திரு.சந்திரசேகர் அவர்கள்.
மக்களின் விருப்பத்தின் பேரில் கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சித்தவநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக முதல்முறையாக தேர்தல் களம்கண்டு வெற்றி பெற்றுள்ளார். மிக எளிய மனிதரான திரு.சந்திரசேகர் அவர்கள் இப்புதிய பொறுப்பின் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக செயல்பட்டு “மக்கள் தலைவராக” பரிணமிக்க வாழ்த்துகிறோம்.