ஊராட்சி மன்ற துணைத்தலைவர் - உடுமலைப்பேட்டை - திரு.V.ரங்கசாமி
திரு.V.ரங்கசாமி அவர்கள் 13.03.1981-இல் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகேயுள்ள ஜில்லோப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் திரு.வேலுச்சாமி நாயக்கர் – திருமதி.லட்சுமி தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். மேல்நிலைப்பள்ளி வரை கல்வி பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.கார்த்திகாயினி என்ற மனைவியும், R.சுபரஞ்சனி, R.கோவர்த்தனி என்ற இருமகள்கள் உள்ளனர்.
சிறு வயதிலிருந்தே ஆன்மீகத்தில் ஈடுபாடுடையவர், விநாயகர் சதுர்த்தி திருவிழாவை எழுச்சியுடன் கொண்டாடி வருபவர்,இந்து முன்னணி அமைப்பினருடன் தொடர்பில் இருந்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக 2000 ஆம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்தவர். ஜில்லோப்பநாயக்கன்பாளையம் கிளைக்கழக தலைவராக பொறுப்பேற்று பதவி வகித்து வருகிறார். பா.ஜ.க சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகள், மாநாடுகள் மற்றும் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டுவருகிறார். ஏழை-எளிய மக்களுக்கு முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை, சமையல் எரிவாயு மானியம் மற்றும் விவசாய மானியங்களையும், அரசின் இலவசத் திட்டங்களையும் பெற்றுக் கொடுத்துவருகிறார். மேலும் உதவிதேடி வரும் மக்களுக்கு தன்னால் இயன்ற அளவு உதவிகளை செய்து வருகிறார்.
அரசியல், விவசாயம் தவிர சமுதாய பணியில் ஈடுபட்டு வரும் திரு.ரங்கசாமி அவர்கள், தமிழக வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாடு கழகத்தின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். சமுதாய கூட்டங்கள் ஏற்பாடு செய்வதில் உறுதுணையாக இருந்து, மக்களைத் திரட்டி கூட்ட்த்தில் கலந்துகொள்ளச்செய்வதில் முனைப்புடன் செயல்பட்டு வருபவர் திரு.ரங்கசாமி. ஆண்டு தோறும் கொண்டாடப்படும் மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாள், நினைவுநாட்களில் சமுதாய மக்களை அழைத்து கொண்டு, திருப்பூரிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
கடந்த 2019 டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஜில்லோப்பநாயக்கன் பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், ஊராட்சி மன்ற துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு செயலாற்றி வருகிறார். தற்போது கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதுடன், நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவரான திரு.ரங்கசாமி அவர்கள் வரும்காலத்தில் அரசியலில் மிகப்பெரிய வெற்றிகளையும், பதவிகளையும் பெற்று, சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க அன்புடன் வாழ்த்துகிறோம்.