துணை வட்டாட்சியர் - துணைச்செயலாளர் இல்லத் திருமணவிழா!
சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் துணைச்செயலாளர் ரவுண்ட் பில்டிங் முருகன் இல்லத்திருமணவிழா இன்று (05.06.2025) வியாழக்கிழமை தூத்துக்குடியில் நடைபெறுகிறது. இதனையடுத்து மணமக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் விபரம் வருமாறு,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அம்பத்தூர் பகுதி 89 வது வட்டச் செயலாளராகவும், சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் துணைச் செயலாளராகவும் இருப்பவர் திரு.A.முருகன். திரு.முருகன் - திருமதி.பூங்கனி ஆகியோரின் அன்பு மகள் எம்.வைசாலு-வுக்கும், திருச்செந்தூர் துணை வட்டாட்சியர் திருமதி.சுபாலெட்சுமி மதிவாணன் அவர்களின் அன்புமகள் M.பிரவின்குமார் B.E., ஆகியோரின் திருமணம் இன்று (05.06.2025) தூத்துக்குடி அபிராமி மஹாலில் நடைபெறுவதையொட்டி இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், பொருளாளர் எஸ்.இராமராஜு, துணைத்தலைவர் ஆர்.பெருமாள், ஒருங்கிணைப்பாளர் டி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதேபோல், கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கொள்கைப்பரப்புச் செயலாளர் ஈச்சனாரி திரு.ஆர்.ஏ.கணேசன் - திருமதி ஜி.சுமதி ஆகியோரின் அன்புமகள் ஜி.விகாசினி B.Sc.,, ஈச்சனாரி திரு.டி.ஆறுச்சாமி - திருமதி.ஏ.இந்திராணி ஆகியோரின் அன்புமகன் ஏ.பிரசாந்த் B.E., ஆகியோரது திருமண வரவேற்புவிழா நேற்று (04.06.2025) மாலை கோவை மதுக்கரை சாலையிலுள்ள கணபதி மஹாலில் நடைபெற்றது.

இத்திருமண வரவேற்பு விழாவில் கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், மகளிரணி ஒருங்கிணைப்பாளர் பாக்கியலட்சுமி, செய்தித் தொடர்பாளர் மக்கள்குரல் செந்தில், வடக்கு மாவட்டத் தலைவர் ஜெயபால், மாவட்டச் செயலாளர் மனோகரன், மாவட்டப் பொருளாளர் ஆர்.கணேசன், மகளிரணி லலிதாம்பிகை, தெற்கு மாவட்டத் தலைவர் டி.குணசேகர், மாவட்ட செயலாளர் எஸ். வெங்கடேஷ், இளைஞரணிச் செயலாளர் கே.குணசேகரன், துணைச்செயலாளர் டி.சுரேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், அரசியல் கட்சிப்பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

