கோவை மாவட்டச் செயலாளர் இல்ல காதணி விழா!

இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இல்ல காதணிவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (29.06.2025) பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள் கலந்துகொண்டு குழந்தைச்செல்வங்களை வாழ்த்தினர். இதன் விவரம் வருமாறு,
கோவை தெற்கு மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் செயலாளர் திரு.ஆர்பிஎஸ்.வெங்கடேஷ்குமார் - திருமதி.வி.ப்ரியா ஆகியோரின் குழந்தைச்செல்வங்கள் வி.பி.மித்தல், வி.பி.நேத்ரன் ஆகியோரின் காதணிவிழா நேற்று முன்தினம் (29.06.2025) ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி டாக்டர் எம்.சி.வேலுச்சாமி திருமண மண்டபத்தில் இராமபட்டணம் ஜாமீன்தார் திரு.விஷ்ணுகாந்த சக்திவேல்ராஜா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி மற்றும் திமுகவைச் சேர்ந்த டாக்டர் மகேந்திரன், தமிழ்மணி, மு,க,முத்து, டாக்டர் வரதராஜன், ஈச்சனாரி மகாலிங்கம், ஒன்றியச்செயலாளர்கள் இராசு, ரமேஷ், காமராஜ், மாசிலாமணி, தேவராஜ் உள்ளிட்ட தலைவர்கள், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சிப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
மேலும், வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பர்பிள் கிளப் நன்கொடையாளர் டி.சிவசாமி, தாமரை துரை, ஊர்நாயக்கர் ஜெயராமன், இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், மகளிரணி ஒருங்கிணைப்பாளர் பாக்கியலட்சுமி, கொள்கைப்பரப்புச் செயலாளர் ஆர்.ஏ.கணேசன், மாவட்டத் தலைவர் குணசேகரன், பொருளாளர்கள் தர்மப்பிரகாஷ், கணேசன், சந்திரசேகர், இளைஞரணிச் செயலாளர் க.குணசேகரன், சுரேஷ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டு குழந்தைகளை ஆசீர்வதித்து வாழ்த்தினர்.