🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கட்டபொம்மன் அறிவாலயம் திறப்புவிழா அழைப்பிதழ்!

கட்டபொம்மன் அறிவாலயம் திறப்புவிழா!

விருதுநகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 'கட்டபொம்மன் அறிவாலயம்' நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படவுள்ளதையடுத்து வெற்றிகரமாக இப்பணியைச் செய்துமுடித்த நிர்வாகிகளுக்கு சமுதாயத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் விவரம் வருமாறு,


விருதுநகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருவது தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக் கல்வி அறக்கட்டளை. இராஜகம்பள மகாஜன சங்கத்தின் முன்னாள் தலைவர் அமரர் வையப்ப நாயக்கர் அவர்களின் மகன் திரு.வை.மலைராஜன் அவர்களை நிறுவன செயலாளராகக் கொண்டு இந்த அறக்கட்டளையானது செயல்பட்டு வருகிறது. தமிழகமெங்கும் சுமார் 400 இராஜகம்பள சமுதாய உறவுகளை இணைத்து தலா ஆயிரம் ரூபாய் நன்கொடையாகப்பெற்று 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளைக்கு பாப்பாகுடியைச் சேர்ந்தவரும் அறக்கட்டளையின் தற்போதைய தலைவருமான திரு.ஜெயப்பாண்டி அவர்கள் 50 சென்ட் நிலத்தை தானமாக வழங்கியிருந்தார்.

சமுதாயத்தின் கல்வி நிலையை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட அறக்கட்டளையானது தொடக்க நிலையில் சமுதாய உறவுகளிடம் பெறப்பட்ட ரூ.400000.00 அப்படியே வங்கியில் முதலீடாக செய்திருந்தது. இதன் மூலம் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற மாணவச்செல்வங்கள் ஆண்டுதோறும் கவுரவிக்கப்பட்டு வந்தநிலையில், அறக்கட்டளைக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட நிலத்தின் அமைவிடம் நகர்ப்புறத்தோடு இணைந்து நல்ல வளர்ச்சியைப்பெற்றுள்ளது. இதனையடுத்து அந்நிலத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் பொருட்டு ஆரம்பகட்ட மூதலீட்டுடன் தற்போதைய நிர்வாகிகளின் பங்களிப்போடு சுமார் 1000 சதுரடியில் 'கட்டபொம்மன் அறிவாலயம்' கட்டி முடிக்கப்பட்டுள்ளது.



கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த மண்ணான விருதுநகரில் கம்பளத்தார்கள் கல்விக்கு முன்னுரிமை தந்து வருங்காலத்தலைமுறையினர் அறிவாயுதம் ஏந்தி உலகை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் கட்டபொம்மன் அறிவாலயம் அமைத்துள்ளதற்கு சமுதாயத்தினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாளை மறுநாள் (07.09.2025) ஞாயிற்றுக்கிழமையன்று கட்டபொம்மன் அறிவாலயம் திறக்கப்படுவதையடுத்து சமுதாயத்தினரின் நன்கொடையை சிந்தாமல் சிதறாமல் சிறப்பானபணி செய்து நிறைவேற்றியுள்ள அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி, சமூக நீதிக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.இராமராஜ், கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved