கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
இன்று பிறந்தநாள் காணும் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 262 சாதிகளை உள்ளடக்கிய சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், இராஜகம்பளத்தார் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மத்திய பொதுப்பணித்துறை ஓய்வு பெற்ற இயக்குனரும், சமுதாய மூத்த தலைவர்களில் ஒருவருமான திரு.பெ.இராமராஜ் அவர்களுக்கு வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். திரு.பெ.இராமராஜ் அவர்கள் இராஜகம்பளத்தார் மேன்மக்கள் அறக்கட்டளையின் ஆலோசகராகவும், இரு உறுப்பினர்கள் கொண்ட கட்டபொம்மன் அகாடமி இலவச பயிற்சி மையத்தின் தேர்வுக்குழுவிலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இன்று கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள ஹேமாம்பிகை திருமண மண்டபத்தில் இல்லற இணையேற்பு காணும் தம்பதிகளான செல்வன் P.மனோகரன் MBA மற்றும் S.நவீனா B.E., ஆகியோருக்கு வீ.க.பொ.இராஜகம்ப்ள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் திருமண வாழ்த்துகள். நேற்று இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் M.சிவக்குமார் மற்றும் தெற்கு மாவட்டத் தலைவர் T.குணசேகர், கொபசெ R.A.கணேசன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.