🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இடமல்ல முக்கியம் - இனமே முக்கியம்! - கோவையில் நெகிழ்ச்சி..

கோவை மாவட்டம் ஈச்சனாரி மற்றும் குளத்துப்பாளையம் ஆகிய இடங்களில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினரின் ஆலோசனைக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.10.2021 ) நடைபெற்றது.

ஈச்சனாரியில் ஊர்நாயக்கர் ஜெயராமன், குள்ளக்காபாளையம் கே.டி.மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்திற்கு ஈச்சனாரி மகாலிங்கம் அவர்கள்  தலைமை வகித்தார்.  இக்கூட்டத்தில் கம்பளத்தார் சமுதாயத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள், இடஒதுக்கீடு, DNT சாதிசான்றிதழ் பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது.


இக்கூட்டத்திற்கு ஒருசில நிமிடங்கள் தாமதமாக வந்த அதிமுக பிரமுகரும், கோவை மாவட்ட கம்பளத்தார் சமுதாய முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான மாச்சநாயக்கன்பாளையம் சிவசாமி அவர்கள் அரங்கிற்குள் வரும்பொழுது கூட்டம் தொடங்கி நடைபெற்று வந்தது. தாமதமாக வந்த சிவசாமி அவர்களை மேடையில் அமர வலியுறுத்தியும் ஏற்க மறுத்தவர், அமரும் இடம் அல்ல முக்கியம்... இனமே முக்கியம் என்றுகூறி கூட்டத்தினரோடு அமரச்சென்றவரை, கூட்டத்தினர் வற்புறுத்தி மேடையில் அமர வைத்தனர்.

பொதுவாக சாதிய அமைப்புகள் நடத்தும் கூட்டத்தில் மேடையில் அமர்வது, நோட்டீஸில் பெயர் போடுவது, போஸ்டரில் படம் போடுவது, பேச வாய்ப்பு பெறுவது போன்றவற்றில் தான் பிரச்சினைகளே உருவாகி, கூட்டத்தின் நோக்கமே சீர்குழைக்கும். அதற்கு முற்றிலும் மாறாக சமுதாய மூத்த தலைவர் தலைவர் நடந்துகொண்டது வருங்கால சமுதாயத்தினருக்கு பாடமாக இருக்கும். 

இந்நிகழ்ச்சியில் இளம் கவிதாயினி செல்வி.ஜெயஸ்ரீ ஆறுச்சாமி எழுதிய "என்னுள் ஒருவன்" கவிதை நூல் வெளியிடப்பட்டது. மாச்சநாயக்கன்பாளையம் திரு.சிவசாமி, பிஜேபி ஒன்றிய செயலாளர் குணசேகர், தொழிலதிபர் குணசேகர்  ஆகியோர் இளம் கவிதாயினி வாழ்த்திப் பேசினர். இக்கூட்டத்தில் கோணவாய்கால் பாளையம் ஊர்நாயக்கர் மோகன்குமார், தொழிலதிபர் கணேசன், சண்முகம்குமார், கார்த்திக், மாச்சநாயக்கன் பாளையம் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 


இதனையடுத்து குளத்துப்பாளையத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்திற்கு ஊர்நாயக்கர் ஜெயபால் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பேசிய இளைஞர்கள் DNT சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணுதல்,  கிராம ரீதியான கட்டமைப்புகளை உருவாக்கி சமுதாய பிரச்சினைகளை எதிர்கொள்வதோடு, எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் திட்டமிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும் தமிழகம் முழுவதும் படித்த இளைஞர்கள் பலர்  வேலைவாய்ப்பின்றி இருப்பதால், அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கிட ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இக்கூட்டத்தில் சின்ன ஊர் நாயக்கர் மாரைய நாயக்கர் உள்ளிட்ட சமுதாய முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். 

ஈச்சனாரி மற்றும் குளத்துப்பாளையத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  அதில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள "சுயம்வரம்", சென்னை சங்கத்தின் எதிர்கால திட்டம், செயல்பாடுகள் குறித்து விளக்கிப்பேசினார். 

கட்சிப்பாகுபாடின்றி திமுக, அதிமுக, பாஜக, மதிமுக, தேமுதிக முக்கிய பிரமுகர்கள் கூட்டத்தில் பங்கேற்றது சமுதாயத்திற்கு இன்றைய தேவையை எடுத்துரைக்கும் வகையில் இருந்தது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காளிமுத்து, சிவக்குமார், ஆர்.ஏ.கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தி உதவி: சிவக்குமார்,  ஈச்சனாரி.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved