சமுதாய தியாகிகள் - நத்தத்துப்பட்டி . திரு.சோலையப்ப நாயக்கர்
அமரர்.திரு.சோலையப்ப நாயக்கர் : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள நத்தத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த திரு.சோலையப்ப நாயக்கர் அவர்கள் 1960 முதல் 1966 வரை நாகலாபுரம் புதூர் ஒன்றியத்தின் முதல் பெருந்தலைவராக பணியாற்றிய பெருமைக்குரியவர். இராஜகம்பள மஹாஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்டதில் முக்கிய பங்காற்றியவர், தென்பாண்டிசீமையில் கம்பளத்தாரின் முகமாக விளங்கியவர். தொட்டிய நாயக்கர் இன மக்களின் வளர்ச்சியில் அதிக அக்கரை கொண்டவர், இராஜகம்பள மஹாஜன சங்கத்திற்காக, இன்று 2கோடி மதிப்புள்ள 27 சென்ட் நிலத்தை தானமாக வழங்கியதுடன், அங்கு சிறப்பான முறையில் கம்பளத்தாருக்கென்றே பிரத்யோக கட்டிடம் அமைய அடித்தளமிட்டவர்.மேலும் பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயத்தின் சீரமைப்புப் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டவர். அவர் மறைந்து காலங்கள் பலமாகிய போதிலும், இன்றும் புதூர் வட்டாரத்தில் “சேர்மன் குடும்பம்” என்று அப்பகுதி மக்களால் அன்புடன் அழைக்கப்படுவது, அவரின் தியாகத்தை பறைசாற்றுகிறது.