சமுதாய தியாகிகள் - மாரனூர்- திரு.திம்ம நாயக்கர்
அமரர்.பட்டக்காரர் (எ) திரு.திம்ம நாயக்கர்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள மாரனூர் கிராமத்தை சேர்ந்தவர் அமரர்.திரு.திம்ம நாயக்கர். பெரும் செல்வந்தர் குடும்பமான இவர்களது வம்சாவளியினரை “பட்டக்காரர்” என்ற அடைமொழியிட்டு அழைக்கிறாரகள். அதாவது, அரசர்கள்,ஜமீந்தார்கள், நாட்டாமை போன்ற பதவிகளுக்கு பட்டம் சூட்டி பதவி ஏற்கும் வழக்கமானது காலகாலமாக பின்பற்றப்பட்டு வந்துள்ளது. அதுபோல் அந்தபகுதிக்கு பட்டக்கார்களாக இவர்களின் வம்சாவளியினர் இருந்துள்ளனர். ஆகையால் அப்பகுதியில் நடக்கும் அனைத்து சுக, துக்கங்களையும் முன்னின்று நடத்துவதுடன், குடும்ப பிரச்சினை, சமுதாய பிரச்சினை, ஊர் பிரச்சினை என எந்த பிரச்சினைகளும் தீர்வு தேடி பட்டக்காரர் வீட்டு கதவை தட்டாமல் செல்லாது என்பது இன்றைய வரைக்குமான அதிசியம். சத்தியமங்கலத்தில் பண்ணாரியம்மன் சர்க்கரை ஆலை அமைப்பதில் முக்கிய பங்காற்றியவர். இதன் மூலம் நமது சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் வேலையில் சேர்ந்து முன்னேறுவதற்கு அடித்தளமாக இருந்தது.