அகவை'69-இல் அகிலம் புகழ் பெருக!
திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" அவர்கள் மார்ச் திங்கள் முதல் நாளாம் இன்று 69-வது அகைவையில் அடியெடுத்து வைக்கின்றார். ஆட்சிப்பொறுப்பேற்றுக்கொண்ட முதல் பத்துமாதங்களை முதல் பிரசவம் காணும் தாயைப்போல் கடினமான சுமையையும், சோதனைகளையும் வெற்றிகரமாக கையாண்டு முத்திரை பதித்துவரும் முத்துவேலரின் வழிவந்த முதல்வருக்கு 40 லட்சம் தொட்டிய நாயக்கர்களின் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
முதலாமாண்டு நிறைவு பெறுமுன்னே முத்திரைகள் பல பதித்து, எதிரிகளின் நித்திரை தொலைக்கச் செய்ய அகில இந்திய அளவில் சமூகநீதி தத்துவத்தை கொண்டுசென்று ஆண்டாண்டு காலமாக சுரண்டப்பட்டு வரும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு அதிகாரக் கதவினை திளந்துவிட முயலும் தங்களின் முயற்சிக்கு இராஜகம்பளத்தார் சமுதாயம் என்றென்றும் துணைநிற்கும் என்று உறுதியளிக்கின்றோம்.
அதேவேளையில், சமூகநீதியின் பிறப்பிடமாம் தமிழகத்தில் தேங்கி நிற்கும் சமூகநீதியால் கடைநிலை சமூகங்களுக்கு அதிகாரம் என்பது இன்று வரை எட்டாக்கனி என்பதை உள்வாங்கி உணர்ந்துகொண்டவராய் அமைத்துள்ள சமூகநீதி கண்காணிப்புக்குழு நூற்றாண்டுகள் இழந்து நிற்கும் அதிகார உரிமையை கம்பளத்தார் உள்ளிட்ட மொழி,சாதி சிறுபான்மை சமூகங்களுக்குத் பெற்றுத்தரும் என்று நம்புகிறோம். முதல்வரின் புகழ்கொடி அகிலமெல்லாம் பட்டொளி வீசிப்பறக்க வீரசக்கதேவி அருள்புரிய வேண்டுகிறோம்.