தெலுங்கின தென்றல் பேராசிரியருக்கு பிறந்தநாள்- தலைவர்கள் நேரில் வாழ்த்து.

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் பிறந்தநாள் விழாவினை தலைநகர் சென்னையில் இந்திய குடியரசு துணைத்தலைவர் மாண்புமிகு வெங்கையா நாயுடு அவர்களை அழைத்து வந்து கொண்டாடி சிறப்பித்தவரும், தெலுங்கு மொழி உரிமைக்காக நீதிமன்றங்களில் வழக்குத்தொடர்ந்து பாதுகாக்க போராடி வருபவரும், அகில இந்திய தெலுங்கு சம்மேளனத்தின் தலைவருமான பேராசிரியர். டாக்டர்.சி.எம்.கே.ரெட்டி அவர்களின் பிறந்தநாள் தாய்மொழி பாதுகாப்பு நாளாக இன்று கொண்டாடப்படுகிறது.
பேராசிரியர். சி.எம்.கே. ரெட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக மாநில அவைத்தலைவர் திரு.பி.எஸ்.மணி வாழ்த்து தெரிவித்தார். அவரோடு திருப்பூர் வடக்கு மாவட்ட விருந்தோம்பல் அணி மாவட்ட துணைத்தலைவர் திரு.ரத்தினசாமி, சத்தியமங்கலம் திரு. சஞ்சீவி, திரு.ராஜ்குமார், திரு.ரவி ஆகியோர் உடனிருந்தனர்.
சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஆலோசகர் திரு.நல்லையா மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.