கோவை மாவட்ட மகாஜன சங்க மூத்த தலைவர் திடீர் மறைவு - தலைவர்கள் இரங்கல்.

கோவை மாவட்ட மகாஜன சங்க மூத்த தலைவர் திடீர் மறைவு - தலைவர்கள் இரங்கல்.
கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம் சின்னப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெருநிலக்கிழாரும், திமுக பிரமுகருமான ஆர்.பி.பூபதி அவர்கள் நேற்றிரவு (05.04.2025) இயற்கை எய்தினார். அன்னாரின் மறைவுக்கு சமுதாயத்தலைவர்கள், அரசியல் கட்சிப்பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு,
கோவை மாவட்ட இராஜகம்பள மகாஜன சங்கத்தின் முக்கிய புரவலராகவும், இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் வழிகாட்டிகளில் ஒருவராகவும், கோவை மாவட்ட இராஜகம்பளத்தார்களில் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் விளங்கியர் சின்னப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெருநிலக்கிழார் திரு.ஆர்.பி.பூபதி அவர்கள். பாறைக்காட்டுக்காரர் என்று அன்புடன் அழைக்கப்படும் திரு.பூபதி அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டப் பிரதிநிதியாகவும், ஒடையகுளம் பேரூராட்சியின் துணைத்தலைவராகவும், தொடக்க வேளாண்மை வங்கியின் துணைத்தலைவராகவும் பொறுப்புவகித்து வந்தவர்.
சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் "பர்ப்பிள் கிளப்" நன்கொடையாளரும், தொழிலதிபருமான திரு.திருவாசகமணி மற்றும் மேற்படி சங்கத்தின் உறுப்பினரான திரு.மங்கல்குமார் ஆகியோரின் மாமனாருமான திரு.ஆர்.பி.பூபதி அவர்கள், கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் வழிகாட்டியாகவும், முப்பெரும்விழாவி வெற்றிகரமாக நடைபெற பேருதவியும் புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு.ஆர்.பி.பூபதி அவர்களின் திடீர் மறைவுக்கு வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், துணைத்தலைவர் இராஜேந்திரன், சந்திரசேகர் உள்ளிட்ட சமுதாயத் தலைவர்களும் அரசியல் கட்சிப்பிரமுகர்கள், உள்ளாட்சிப்பிரதிநிதிகள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.