🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பாதியில் முடிந்த பயணம் - அகமதாபாத் விமான விபத்து!

குஜராத் மாநிலம் அகமதாபத்திலிருந்து லண்டன் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான AI-171 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதில் குஜராத் முன்னாள் முதல்வர், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உட்பட 241 பேர் பலியாகியுள்ளனர். உலகத்தையே சோகத்திற்குள்ளாக்கிய இந்த விமான விபத்தில் இயிரிழந்தவர்களுக்கு இராஜகம்பள சமுதாய மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

விமானத்தில் பறக்க வேண்டுமென்ற ஆசை அனைவருக்கும் இருக்குமென்றாலும், நிஜத்தில் நிகழ்சும்போது ஒருவித பயம் இருக்கத்தான் செய்யும். இதற்கு பயந்துகொண்டு சிலர் விமானப்பயணங்களை தவிர்த்துவிடுவதுண்டு. பெரிய வணிகவளாகங்கள், இரயில் நிலையங்களிலுள்ள நகரும் படிக்கட்டு (Escalator) களில் ஏறுவதையே சிலர் தவிர்த்துவிடுவதை அவ்வப்போது நேரடியாகப்பார்க்கிறோம். அவ்வாறான நிலையில் விமானப்பயணத்தை சிலர் தவிப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் முதலாளித்துவ பொருளுற்பத்தி சமுதாயத்தில் நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் விமானப்பயணங்கள் தவிர்க்கமுடியாததாகிவிட்டது.

நம் காதுகளுக்கு வரவில்லையென்றாலும் அங்கும் இங்குமாய் விமான விபத்துகள் உலகம் முழுக்க நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. 2023-ல் 182 விபத்துகளும், 2024-ல் 258-ம் நிகழ்ந்துள்ளன. இவற்றில் சிறிய விபத்திலிருந்து உயிரிழைப்பை ஏற்படுத்துகிற பெரிய விபத்துகள் வரை எல்லாமே அடக்கம். 

இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க விமான விபத்துகள். 

கடந்த 2020-ல் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 1344 காலிகட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

மே 22, 2010, மங்களூர் விமான விபத்து: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 812 மங்களூரில் ஓடுபாதையை விட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் 158 பேர் உயிரிழந்தனர்.

ஜூலை 17, 2000, அலையன்ஸ் ஏர் விமானம் 7412-ல் போயிங் 737 விமானம் பாட்னாவில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நவம்பர் 12, 1996, சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் போயிங் 747 மற்றும் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் இலியுஷின் இல்-76 ஆகியவை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு விமானங்களிலும் இருந்த 349 பேரும் உயிரிழந்தனர்.

ஏப்ரல் 26, 1993,  இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 491, போயிங் 737, அவுரங்காபாத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் விபத்து  நேரிட்டதில் 55 பேர் உயிழந்தனர்.

ஆகஸ்ட் 16, 1991, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 257 இம்பால் அருகே விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 69 பேரும் உயிரிழந்தனர்.

பிப்ரவரி 14, 1990, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 605, ஏர்பஸ் A320, பெங்களூருவை நெருங்கும் போது விபத்துக்குள்ளானதில் 92 பேர் உயிரிழந்தனர்.

அக்டோபர் 19, 1988,  இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 113 அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானது. இதில், 133 பேர் உயிரிழந்தனர்.

ஜூன் 21, 1982, ஏர் இந்தியா விமானம் 403 பம்பாய் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில், 17 பேர் உயிரிழந்தனர்.

ஜனவரி 1, 1978, ஏர் இந்தியா போயிங் 747 விமானம் மும்பையில் இருந்து புறப்பட்ட பிறகு அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 213 பேரும் உயிரிழந்தனர்.

விமானப்பயணம் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து ஒரு கவிதையில் இவ்வாறு எழுதியிருப்பார்.

"விமானப் பயணமா..

தூக்க மாத்திரை இட்டுக்கொள்.

விமானம் விரைந்தால் தூரம் தெரியாது.

விமானம் விழுந்தால் துக்கம் தெரியாது."

தவிர்க்கமுடியாத பயணமென்றால் எதையும் தாங்கித்தான் ஆகவேண்டும். ஆனால் அகமதாபாத் கோரவிபத்து விமானம் புறப்பட்ட ஒருசில நிமிடங்களில், ஒரு கிலோமீட்டர் உயரத்தைக்கூட தொடும் முன்பு, அன்புச்சொந்தங்களை ஆனந்தக் கண்ணீர் மல்க வழியனுப்பிவிட்ட ஈரம் காயும் முன், நெஞ்சைப்பிளக்கும் துயரத்தோடு அழும் நிலைக்கு தள்ளப்பட்டது வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாதது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கனவுகலைச் சுமந்துகொண்டு வானில் வட்டமிட்டுப்பறக்கத்தயாராகும் முன்பே சிறகொடிந்து வீழ்ந்து மடிந்தது மனித மனங்களை நிம்மதியிழக்கச் செய்துள்ளது. விமானம் பறக்கும் பாதையில் கட்டிடம் இருந்தது தவிர வேரு எந்தவித சம்மந்தமும் இல்லாத மருத்துவக்கல்லூரி மாணவர்கள் இவ்விபத்தால் உயிரிழக்க நேரிட்டது கொடுமையிலும் கொடுமையானது.

உலகை உரயச் செய்துள்ள விமான விபத்தில் உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இராஜகம்பள சமுதாய மக்களின் இரங்கலை பதிவு செய்கிறோம்.     

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved