🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அடுத்த தலைமுறை அரசியலின் நம்பிக்கை நாயகிகள்!

திருமதி S.சங்கீதா அவர்கள் 06.11.1996-இல் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள தடாகோவில் கிராமத்தில் திரு.செல்வராஜ் - திருமதி.அம்பிகா தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தி மகளாகப்பிறந்தார். ஆரம்பக்கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை கரூரிலும், தமிழ் இலக்கியத்தில் இளங்கலை (B.A.,Lit) பட்டப்படிப்பை தூத்துக்குடியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும், ஆசிரியர் பயிற்சியை அன்னை தெரசா கல்லூரியிலும் பயின்றார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள கரடிப்பட்டியைச் சேர்ந்த திரு.A.ஆனந்தகுமார்.M.Sc.,B.Ed., என்பவரை மணந்துள்ள இத்தம்பதிகளுக்கு A. சாய் வெற்றிவேல் என்ற மகனும், A.மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். 

திரு.ஆனந்தகுமார்  (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்) சமுதாயத்திலும், அரசியலிலும் நீண்ட நெடிய  பாரம்பரியமும், புகழுக்கும் உரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின்  தாத்தா திரு. S.மல்லையன் அவர்களும், தந்தையார் திரு.M.அண்ணாதுரை அவர்களும் அரவக்குறிச்சி ஒன்றிய பெருந்தலைவர்களாகவும், பேரூராட்சித் தலைவர்களாகவும், பதவி வகித்த பெருமைக்குரியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர அமரர்.S.மல்லையன் (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்) அவர்கள் திமுகழகத்தின் அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளராக நெடுங்காலம் பதவி வகித்தவர். அதேபோல் தந்தையார் திரு.M.அண்ணாதுரை அவர்கள் திமுகழகத்தின் அரவக்குறிச்சி நகரச் செயலாளர்களாக நீண்ட காலம் பதவி வகித்தவர்.

திராவிட முன்னேற்ற கழகத்துடன் இரண்டரக் கலந்து விட்ட  அரசியல் குடும்பத்தின் மருமகளாக அடியெடுத்து வைத்த சங்கீதாவும் அரசியல் பின்புலம் கொண்டவர். இவரின் சித்தப்பா திரு.கலையரசன் அவர்கள் அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர். தற்பொழுது அதிமுக அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளராக பணியாற்றி வருகிறார்.

நெடிய அரசியல் பின்னனியோடு நேரடி அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள திருமதி.சங்கீதா, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட 2-வது வார்டில் திமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மகத்தான வெற்றிபெற்று முதல்முறையாக பேரூராட்சி மன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார். இயல்பிலேயே மக்கள் சேவையில் அதிக அக்கறைகொண்டுள்ள இளம் தலைமுறையைச் சேர்ந்த திருமதி.சங்கீதா அவர்கள் அரசியலில் பயணிக்க வேண்டிய தூரம் மிக அதிகம் என்றபோதும் வாய்ப்புகளும் மிக அதிகம். கட்சியில் அடுத்த தலைமுறை தலைவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு வரும் இந்த சூழலில், அரசியலில் தங்கள் குடும்ப முன்னோர்களின் உழைப்பை உரமாக்கி கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி மேன்மேலும் வளர வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved