🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஊராட்சி மன்றத் தலைவர் - நாமக்கல் - திரு.C.ஜெயக்குமார்

திரு.C.ஜெயக்குமார் அவர்கள் 25.05.1981-இல் நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகேயுள்ள பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் திரு.சின்னுசாமி – திருமதி. சாவித்திரி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். எஸ்.எஸ்.எல்.சி வரை பயின்றவர், பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப் பணியில் சிலகாலம் ஈடுபட்டு வந்தார். இவருக்கு திருமணமாகி  திருமதி.J.கீதா என்ற மனைவியும், J.சந்தோஷ் என்ற மகனும், J.சௌமியா என்ற மகளும் உள்ளனர்.

சுயதொழிலில் ஆர்வம் கொண்ட திரு.ஜெயக்குமார் அவர்கள் 2001-ஆம் ஆண்டு முதல், நாமக்கல்லில் பழனி முருகன் புக்கிங் ஏஜெண்ட் மற்றும் டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்.  இந்நிறுவனத்தின் மூலம் சொந்தமாக லாரிகளை இயக்குவதுடன், புக்கிங் ஏஜெண்டாகவும் இருந்து வருகிறார். நாமக்கல் மாவட்ட லாரி புக்கிங் ஏஜெண்ட் அசோசியேசனில் சுமார் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வகிக்கும் திரு.ஜெயக்குமார் அவர்கள்நாமக்கல் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்திலும் கடந்த இரண்டு வருடங்களாக செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2001-ஆம் ஆண்டு வசந்தம் நற்பணி மன்றம் மூலம் பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்த திரு. ஜெயக்குமார் அவர்கள், அந்த அமைப்பின் இணைச்செயலாளராக பொறுப்பு வகித்தார். 2002-ஆம் ஆண்டில் வசந்தம் நடக மன்றத்தை துவங்கி அதன் செயலாளராகப்பணியாற்றியவர்,  கேப்டன்.விஜயகாந்த் அவர்கள் 2005-ஆம் ஆண்டு தேமுதிக-வைத் துவங்கியபொழுது அக்கட்சியில் இணைந்து பாப்பிநாயக்கன்பட்டி கிளைக்கழக செயலாளராகப் பொறுப்பேற்று சுமார் ஆறு ஆண்டுகள் அக்கட்சியில் பயணித்தார். அதன்பின் 2011-ஆம் ஆண்டு அஇஅதிமுக வில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்,கொண்ட திரு.ஜெயக்குமார் அவர்கள், உள்ளூர் நிர்வாகிகளுடன் இணைந்து தீவிரமாக கட்சிப்பணியாற்றி வந்தார். இன்றளவும் அடிப்படை உறுப்பினரளவிலேயே தொடரும் திரு.ஜெயக்குமார் அவர்கள், கட்சி நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும்  முதன்மையானவராக கலந்துகொள்வதுடன், தேர்தல் காலங்களில் கட்சிக்காக கடுமையாக உழைத்து வருகிறார்.

2011-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் மூலம் தேர்தல் அரசியலைத் தொடங்கிய திரு.ஜெயக்குமார் அவர்கள் 2016-வரை பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 2016-முதல் முதலிபட்டி தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியில் இயக்குனராக பதவி வகித்து வந்த திரு.ஜெயக்குமார் அவர்கள், 2018-முதல் அதே தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியில் துணைத்தலைவர் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாப்பி நாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு  ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.ஜெயக்குமார் அவர்கள், புதுச்சத்திரம் ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் பொருளாளராகவும் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் அரசியல் தலைவரான திரு.ஜெயக்குமார் அவர்கள் இந்த புதிய பொறுப்பின் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் சாதி,மத,மொழி,இன பாகுபாடின்றி சிறப்பாக செயலாற்றி சார்ந்திருக்கும் கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved