ஊராட்சி மன்றத் தலைவர் - விளாத்திக்குளம் - திரு.V.அழகுபாண்டி
திரு.V.அழகுபாண்டி அவர்கள் 1974-இல் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம், N.ஜெகவீரபுரம் கிராமத்தில் திரு.வேலுச்சாமி – திருமதி.அமராவதி தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் பிறந்தார். இவர் தொடக்கப்பள்ளி வரை பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.A.சண்முகலட்சுமி என்ற மனைவியும், A.பாண்டீஸ்வரன், மற்றும் A.லித்தீஸ்பாண்டி என்ற இரு மகன்களும் உள்ளனர்.
இளம்வயதிலிருந்தே கேப்டன்.விஜயகாந்த் அவர்களின் தீவிர ரசிகராக இருந்த திரு.அழகுபாண்டி அவர்கள், 2005-ஆம் ஆண்டு தேமுதிக –வைத் துவங்கியபொழுது அதில் இணைந்து தீவிரப்பணியாற்றி வந்தார். பொதுமக்கள் சேவையில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு செயல்படுபவரான திரு.அழகுபாண்டி அவர்கள், உள்ளூர் மக்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றிக்கொடுப்பதில் முனைப்புடன் செயல்படுபவர். தவிர உள்ளூர் நிகழ்வுகள் அனைத்திலும் முன்னின்று செயலாற்றுபவர், மக்களின் சுக-துக்கங்களில் பங்கெடுத்து அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர். கட்சியின் அனைத்து நிகழ்விலும் கலந்துகொள்பவர், கழக ஆட்சியில் நிறைவேற்றப்படும் நலத்திட்டங்களையும், உதவிகளையும் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் திறம்பட செயலாற்றுபவர்.
மக்களின் விருப்பத்தின்பேரில் கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் N.ஜெகவீரபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மக்களின் அபிமானத்தையும், அன்பையும் பெற்றவரான திரு.அழகுபாண்டி அவர்கள், தொடர்ந்து அனைத்து மக்களுக்காகவும் பணியாற்றி சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.