அரசியல் பிரபலங்கள் - வைப்பார் - திரு.M.செண்பகப்பெருமாள்
திரு.M.செண்பக பெருமாள் அவர்கள் 1974-இல் தூத்துக்குடி மாவட்டம், வைப்பார் கிராமத்தில் திரு.மல்லுசாமி நாயக்கர் – திருமதி.மல்லம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் தொடக்கக் கல்வி வரை பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி. S.லட்சுமி என்ற மனைவியும் S.ராஜாமல்லுசாமி, S.மகேந்திரன் என்ற இருமகன்களும் S.சித்ராதேவி என்ற மகளும் உள்ளனர்.
1994 ஆம் ஆண்டு திரு.வைகோ அவர்கள் மதிமுக-வை துவங்கியபொழுது அக்கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைந்து பணியாற்றி வந்த திரு.செண்பக பெருமாள் அவர்கள், 2006 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை பத்தாண்டுகாலம்
வைப்பார் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றியுள்ளார். 2017
ஆம் ஆண்டு மதிமுக-வின் தூத்துக்குடி மாவட்ட பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு,
அப்பதவியில் ஓராண்டுகாலத்திற்கு மேலாக பணியாற்றியுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், நியூட்ரினோ,
முல்லைப்பெரியாறு போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்காக நடைபெற்ற நடைபயணம், போராட்டங்கள்,
ஆர்ப்பாட்டம், மறியல்களில் கலந்துகொண்டு பலமுறை கைதாகியுள்ளார். இதுதவிர கட்சியின் மாநாடுகள், பொதுக்கூட்டங்களில்
தொடர்ந்து கலந்துகொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். 2018-ஆம் ஆண்டு அஇஅதிமுக-வில் இணைந்த திரு.செண்பக பெருமாள் அவர்கள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். ஆளும்கட்சியின்
பொறுப்பாளராக செயல்பட்டு வரும் திரு.செண்பகபெருமாள் அவர்கள், அரசின் பல்வேறு நலத்திட்ட
உதவிகளை பொதுமக்களுக்கு பெற்றுத்தந்து வருகிறார்..
இவர் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றிய காலத்தில் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி, தெருவிளக்குகள், சாலை வசதி, சுகாதார கழிப்பிட வசதி, நிழல்கொடை, சாக்கடை வசதி, அங்கன்வாடி, போன்ற பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். மேலும், ஏழை-எளியவர்களுக்கு பசுமை வீடுகள், தொகுப்பு வீடுகள், முதியோர் உதவித்தொகை, விவசாய மானியம், இலவச ஆடு என அனைத்து நலத்திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார்.
சமுதாய பணியிலும் அக்கறையுடையவரான திரு.செண்பகபெருமாள் அவர்கள், மாவீரன் கட்டபொம்மன் நினைவுநாளன்று பாஞ்சாலங்குறிச்சியிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், கயத்தாறில் திரு.வைகோ அவர்கள் தலைமையில் நடைபெறும் நினைவுநாள் பொதுக்கூட்ட ஏற்பாட்டாளராக சிறப்புற பணியாற்றியுள்ளார். மேலும் மாவீரன் கட்டபொம்மனுக்கு எதிராக சமூகவலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமுதாய மக்களை திரட்டி வைப்பாரில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியுள்ளார். அதிமுக-வில் தற்பொழுது தீவிரமாக செயல்பட்டு வரும் திரு.செண்பகபெருமாள் அவர்கள் எதிர்வரும் காலங்களில் மேலும் பல வெற்றிகளை குவித்து, புதிய பொறுப்புகளை அடைந்து, சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டி அன்புடன் வாழ்த்துகிறோம்.